Monday, December 13, 2010

Thavampetranayagi udanirai eesar

விருது நகர் மாவட்டம் ,. ராசபாளையம் . அங்கிருந்து ஒரு நாற்ப்பது ஐந்து நிமிட பயணம் ,. தேவி பட்டினம் அங்கிருந்து பத்து கிலோ மீட்டர் பயணம் ,. திரு வோலக்கம் பறை மலை அடிவாரம் ,. இது நாம் தவன் பெற்ற நாயகி உடனிறை ஈசர் ,. கோவிலுக்கு செல்லும் வழி ,.



மலை அடிவாரத்திலிருந்து சுமார் இரண்டரை மணி நேரம் மேற்கு தொடர்ச்சி மலை இன் ஊடே நடக்கவேண்டும் ,.

இதில் ஒரு மகிழ்ச்சி என்ன வென்றால் இங்கு தரை தளமாகவே அதிக பயணம் மழை ஏற்றம் குறைவு ,.
தரை தளமாக இருந்தாலும் இரண்டரை மணி நேர நடை பயணம் தவிர்ர்க்க முடியாதது ,.

சதுரகிரி பெருமான் தான் எனக்கு இங்கு செல்ல அழைப்பு விடுதரோ என்னமோ தெரிய வில்லை ,.
திருவோலக்கம் பாறை நான் செல்வது திடீர் பயணமாக அமைந்தது
ஒரு வரகடைசியின் வெள்ளி கிழமை அதிகாலை அங்கு அடிவாரத்தை அடைந்தோம் ,. அடிவாரத்திலிருந்து சுமார் ஒரு மணி நேர பயணம் வேங்கை பாறை எண்டு ஒரு இடத்தை அடைந்தோம் ,. அந்த இடத்தில ஒரு ஓடை நன்னீர் ஓடை தண்ணீர் வெள்ளமென பாய்ந்து ஓடி கொண்டிருந்தது ,.
அங்கிருந்து வட்டமான பறையை ஒட்டி ஒரு பெரிய குகை ஒன்று இருந்தது ,. அது ஒரு சின்ன வீடு போல அமைப்பை பெற்று உள்ளது ,.


அதை நாங்கள் பார்த்து விட்டு அங்கயே அதிகாலை உணவை முடித்து கொண்டோம் ,


வேங்கை பாறையிலிருந்து சுமார் ஒரு மணி நேர பயணம் நாய் பாறையை வந்து அடைந்தோம் ,.


அக்ங்கிருந்து ஒரு அஈய் மணி நேர பயணம் ,. வழுக்குபாறை வந்து அடைந்தோம் ,.
வழுக்கு பாறையில் குளிக்கும் பொழுதுதான் என்னுடன் வந்த நண்பர்களுடன் சகஜமாக பேச ஆரம்பித்தேன் ,.

காரணம் திடீர் பயணம் ,. எனக்கு சேத்தூர் இல் உள்ள நண்பர் மோகன் மட்டும் தான் தெரியும் அவர் வாருங்கள் போகலாம் என்று அழைப்பு விடுத்தது இருந்தார்
நான் அவர் கூட மட்டும் தான் போக போகிறேன் என்று இருந்தேன் ,.
வெள்ளிகிழமை அதிகாலை சேத்தூர் ஐ நான் சென்று அடைத்த பொழுது அடேங்கப்பா அங்கு ஒரு மினிடோர் வேனில் பத்திருக்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள் ,.

எல்லோரும் இளைஞர்கள் வழுக்கு பறையில் குளிக்கும் பொது தான் அவர்கள் பெயரை நான் தெரிந்து கொண்டேன் ,. மிக வேடிக்கையாக இருந்தது ,.

அவர்கள் எல்லோரும் கிராமத்துமண்வாசனை மாறாதவர்கள் ,.

அவர்கள் ஒருவருக்கொருவர் வேடிக்கையான பட்ட பெயர்களை சூட்டி அழைத்து கொண்டனர் அதையே நான் இங்கு பதிவில் இடவும் விரும்புகிறேன் ,.


சரவணன் என்கிற கோழி ,. சீதா என்கிற சீதாராமன் ,. மாரியப்பம் ,. மோகன் ,. குஞ்சு என்கிற லக்ஷ்மன் ,. பாஸ் டான் என்கிற லக்ஷ்மன் ,. இனொருவர் பெயர் தெரியவில்லை ஆனால் நிக் நேம் சிங்கம்,. கொய்யாபழம் ,.
தாத்தா என்கிற வீர மணி ,. பலசரக்கு ,. காளிதாஸ் ,. மகேந்திரன் ,. இப்படி அவர்களுக்கு உல் கேலியாக பட்ட பெயர் சூட்டி கிண்டல் அடித்து கொண்டே வந்தனர் ,.

வழுக்கு பாறையில் அறிமுக படலம் முடிந்தது ,. அங்கிருந்து பத்து நிமிடத்தில் கோவிலை அடைந்தோம் ,.


கோவில் பூசாரி வெள்ளிகிழமை ஆதலால் பூஜை சாமான்களோடு வந்திருந்தார் ,.


உடன் வந்திருந்த நண்பர்கள் மதிய உணவு தயாரிக்கும் பணியில் ஈடு பட்டனர் ,.

நான் குளித்து விட்டு பூசாரியுடன் பூஜைக்கு உதவி கொண்டிருதேன் ,.

உணவு தயாரித்து முடித்த நண்பர்கள் ஒவ்வருவராக பூஜையில் கலந்து கொண்டோம் ,.

மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனத்திற்குள் உள்ளதால் ,.

அங்கு செல்வோர் மிக குறைவு மாதத்திற்கு நூறு பேர் சென்றாலே அதிசயம் ,.

கோவில் பராமரிக்க ஆள் இல்லை ,.

நாய் பாறையில் பழங்காலத்து கல்வெட்டுகள் உள்ளன ,. அடுத்த முறை செல்லும் பொழுது எனது கல்வெட்டு ஆராய்ச்சி நண்பரையும் அழைத்து செல்ல முடிவு செய்து உள்ளேன் ,.

ஆதலால் கோவிலை சுத்தம் செய்யும் பணியில் நானும் உடன் வந்த நண்பர்களும் செய்து பூசாரி அபிசேகம் செய்யும் பணியில் இறங்கினார் ,.


பூஜை சிறப்பாக முடிந்தது ,,.

இங்குள்ள லிங்கம் தற்பொழுது தான் பிரதிடை செய்ய பட்டுள்ளது ஆனால் தவம் பெற்ற நாயகி அம்மன் சிலை பழங்காலம் தொட்டு மன்னர்களால் பராமரிக்க பட்டு வந்து உள்ளது ,.

குறிப்பாக ராஜபாளையம் ராஜுஸ் இக்கோவிலை பராமரித்து உள்ளனர் ,.


தவம் பெற்ற நாயகி இங்கி ஒற்றை காலில் தவம் செய்த நிலையில் உள்ளார் ,.


இங்கும் சித்தர்கள் தவம் மேற்கொண்டு அம்மையின் சக்தியை வரமாக பெற்று உள்ளனர் ,.

மலையில் மேலே கள்ளி மலை எஸ்டேட் ,. தேவியர் எஸ்டேட் ,. உள்ளது ,.


ஆனால் எஸ்டேட் இல் வேலை செய்யும் ஆட்கள் மிக குறைவு ,. சுமார் இருபது குடும்பங்கள் இருந்தாலே அதிசயம் தான்


இன்னும் நிறைய தகவல்கள் உள்ளது ,. நண்பர்களே ,. வரும் இடுகைகளில் நிச்சயமாக சொல்கிரறேன் ,.

உலக்கை அருவி சென்றது ,. எஸ்டேட் சுற்றி பார்த்தது எல்லாம் சொல்கிறேன் ,.


உலக்கை அருவி நிச்சயாமாக அனைவரும் பார்க்க கூடிய ஒன்று ,.
ஆனால் அங்கு செல்வது ,. மிக கடினம் ,. அதும் உடல் நிலை சிக்ஸ் பாக் ஆட்கள் மட்டும் தான் செல்ல முடியும் ,.

ட்ரெக்கிங் செல்வோருக்கு மிக அருமையானதாக அமையும் அதற்கு நான் உறுதி சொல்கிறேன் ,.
தவம் பெற்ற நாயகி என்று கூகுளே சர்ச் தேடினால் அம்மனுடைய அபிசேக வீடியோ இருக்கும் ,. பார்க்கலாம் ,.


உலக்கை அருவி ,. அதை சுற்றிய பயணங்களை ., அடுத்த இடுகையில் இடுகிறேன் ,/.

9 comments:

Unknown said...

அம்மாவின் ஆலயம் ஆரம்பத்தில் இருந்து சேத்தூர் ஜமின்னால் பராமரிக்கப்பட்டது...
நான் கடந்த வாரம் கூட திருஒலக்கம் பாறை சென்று அம்மா அருள் பெற்று ஒரு இரவு தங்கி மறுநாள் பெளர்ணமி பூஜை முடித்து வந்தோம்

மருத நில வேந்தன் said...

ayya vanakam

nan thavampetra nayagi alayam sella virumbukiren...

eppadi sella vendum entha nalil selavendum
thodarbu en anubi vaikungal

nandri

endrum anbudan

tks pandian

Unknown said...

படித்ததில்விருப்பம்

Unknown said...

Sure...very beautiful natural & spititual holy place.
Thavampetranayagi penance for as Lord Sivas order...I,also visited with sethur Rishikesh swamy Anbananda ,Bodi sathyaseelan formerly deviyar estate worker..and Devipattanam Ramasamy also..some yrs.ago.
After darshans we had return onthe way surprised one Forest Bulluck appeared before..we had feared atonce ..praying Lord siva..quickly it was gone..really austonished ..in the begining night ...
Goddess Thavampetranayagi..is our kuladeivam.

Unknown said...

Our ancients long long ago resided in sethur Sivagiri..noone can idendified
for our relatives ithat areas.we had Migrated to Thamaraikulam vge.periyakulam tk.Now Theni dist.
Some austrlatiour told yr.generation came from Sethr Sivagiri ...Setur..or..Sivagiri
Not known particularly..
Devadanam Sastha koil Dharmasastha is our kuladeivam..our goddess Thavampetranayagi also we had came from as a priest family.
Now our residents Bodinayakanur
by. P.Chellapandian.

Aurochandru73 said...

Iyya
அங்கு செல்ல. விபரம் அறிய உங்கள் number வேண்டும்

Unknown said...

9750672658

faiselkaden said...

Online Gaming - Casinos, Software & Betting - JT Hub
Casinos, software and betting 경산 출장안마 games. Casino gaming for real money! Play 구미 출장마사지 live dealer games 보령 출장마사지 and win real 제주 출장마사지 money! 정읍 출장안마

Unknown said...

Intha ammavasaiku31-3-2022 pogalamnu iruken. Any contact no sir

Post a Comment